Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

நடிகர் சுஷாந்த் சிங் மறைவுக்கு பிரதமர் மோடிம் மற்றும் பிரபலங்கள் இரங்கல்

நடிகர் சுஷாந்த் சிங் மறைவுக்கு பிரதமர் மோடிம் மற்றும் பிரபலங்கள் இரங்கல்
, ஞாயிறு, 14 ஜூன் 2020 (17:21 IST)
நடிகர் சுஷாந்த் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் பிரபலங்கள் இரங்கல்
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் பிரதமர் மோடி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட பல பிரபலங்கள் தங்களுடைய டுவிட்டர் பக்கங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர் இது குறித்து பிரபலங்கள் தெரிவித்துள்ள இரங்கல் குறித்து தற்போது பார்ப்போம்
 
பிரதமர் மோடி: "சுஷாந்த் சிங் ராஜ்புத். ஒரு திறமையான இளம் நடிகர், சீக்கிரம் நம்மைப் பிரிந்துவிட்டார். தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் அவர் திறம்பட மிளிர்ந்தார். பொழுதுபோக்கு உலகில் அவரது வளர்ச்சி பலருக்கு உந்துதலைத் தந்தது. என்றும் நினைவில் நிற்கும் சில கதாபாத்திரங்களை அவர் விட்டுச் சென்றுள்ளார். அவரது மரணம் அதிர்ச்சியைத் தருகிறது. அவரது குடும்பத்துக்கு, ரசிகர்களுக்கும் என் ஆறுதல்கள். ஓம் ஷாந்தி."
 
அரவிந்த் கெஜ்ரிவால்: இந்தியாவின் வளர்ந்து வரும் நட்சத்திரமான சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம் அதிர்ச்சியூட்டுகிறது. அவரது மில்லியன் கணக்கான ரசிகர்களை பெரும் வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அவரது திரைப்படம் மற்றும் அவரது நடிப்பு எப்போதும் நினைவில் இருக்கும். இந்த இழப்பைச் சமாளிக்க அவரது நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பலம் இருக்கட்டும்
 
வீரேந்திர சேவாக்: வாழ்க்கை எளிதில் முறியக் கூடியது. ஒருவர் தனது வாழ்க்கையில் எதை எதிர்கொண்டு இருக்கிறார் என்பது நமக்கு தெரியாது
 
ஹர்பஜன் சிங்: சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிருடன் இல்லை என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இந்த செய்தி பொய்யானதாக இருக்ககூடாதா" 
 
இர்ஃபான் பதான்: கடைசியாக சுஷாந்த் சிங்கை பார்த்தபோது, அவர் நடித்த 'கேதர்நாத்' திரைப்படம் நன்றாக இருந்தது என வாழ்த்து சொன்னேன். அவர் என்னிடம் சிசோரே படம் பாருங்கள் என கூறினார். தற்போது வந்துள்ள இந்த தற்கொலை செய்தி அதிர்ச்சியாக உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிரிக்கெட் வீரர்களையும், திரையுலகையும் அதிர வைத்த மரணம்! – வெளியாகாத சுஷாந்த்தின் கடைசி படம்!