மோகன் லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 2015 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.
இதே போல அதன் இரண்டாம் பாகமும் ரிலீஸாகி வெற்றி பெற்றது. தற்போது மூன்றாம் பாகத்துக்கான வேலைகளில் ஜீத்து ஜோசப் ஈடுபட்டு வருகிறார். த்ரிஷ்யம் முதல் பாகத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் நடித்தார். அதையடுத்து இரண்டாம் பாகம் கோவிட் பெருந்தொற்று காரணமாக நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி வெற்றிபெற்றது.
இதையடுத்து மூன்றாம் பாகம் மற்றும் நான்காம் பாகத்தை உருவாக்கும் முனைப்பில் உள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப். மூன்றாம் பாகத்துக்கான திரைக்கதை பணிகள் நடந்து முடிந்த நிலையில் இன்று முதல் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளனர். பூஜை சம்மந்தமான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.