Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜித் பிறந்தநாளில் மீண்டும் கேப்டனாக “தல” தோனி! – முன்னாள் கிரிக்கெட் வீரர் ட்வீட்!

Advertiesment
Cinema
, ஞாயிறு, 1 மே 2022 (10:33 IST)
இன்று சினிமா நடிகர் அஜித்குமார் பிறந்தநாளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்கிறார் தோனி.

தமிழ்நாட்டில் “தல” என்ற பட்டப்பெயரை பெற்றவர்கள் இரண்டே பேர். முதலாவது தமிழ் சினிமா நடிகர் அஜித்குமார். இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி.

சமீபத்தில் தன்னை “தல” என்ற பெயரால் அழைக்க வேண்டாம் எனவும், அஜித்குமார் என்றே குறிப்பிடும்படியும் நடிகர் அஜித்குமார் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும் தற்போது வரை பலர் அவரை சமூக வலைதளங்களில் தல என்றே குறிப்பிட்டு வருகின்றனர்.
Cinema

இன்று நடிகர் அஜித்குமார் பிறந்தநாள் கொண்டாடப்படும் அதேசமயம் இன்று நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் பதவியேற்கிறார் “தல” தோனி.

இந்த சுவாரஸ்யமான தற்செயல் நிகழ்வு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் “அஜித் பிறந்தநாளில் தல தோனி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்கிறார். என்ன ஒரு தற்செயல் நிகழ்வு” என பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று அஜித் பிறந்தநாள்: வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!