தெலுங்கு மற்றும் தமிழில் அதிகம் திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான இருந்தவர் நடிகை சமந்தா. இவர் அறிய வகை தசை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். தொடர்ந்து உடல் நிலை சரிசெய்துக்கொண்டே படங்களில் நடித்து வருகிறார்.
கடைசியாக தெலுங்கில் சாகுந்தலம் படத்தில் நடித்தார். அப்படம் பெரும் தோல்வியை சந்தித்தது. அதையடுத்து கமிட்டான படங்களில் மட்டும் நடித்துவிட்டு சினிமாவிற்கு டாட்டா கட்டிவிட்டு உடல் நலம் கவனிக்க முழு நேர ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்நிலையில் பெரு நாட்டில் குய்லின் - பார் சிண்ட்ரோம் என்ற அரிய வகை நோய் 165 பேருக்கு பரவியுள்ளதாம். இது சமந்தாவை தாக்கியுள்ள மயோசிட்டிஸ் நோய் போன்ற அறிகுறிகளே தென்படுகிறதாம். ஆம், இந்த நோய் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு மண்டலத்தையே தாக்க தொடங்கியுள்ளதாம். வயதானவர்கள், ஆண்களுக்கு தான் இந்த நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாம்.
இதனால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து நோயின் தீவிர தன்மையை உணர்ந்த பெரு நாட்டில் 95 நாட்கள் சுகாதார நெருக்கடி நிலையை அறிவித்துள்ளதாம். இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.