Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிசாசு 2 கண்டிப்பாக ரிலீஸாகும்.. தயாரிப்பாளர் கொஞ்சம் பிரச்சனையில் இருக்கார் – மிஷ்கின்!

vinoth
வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (09:01 IST)
மிஷ்கின்  இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பிசாசு 2’.  2014-ம் ஆண்டு வெளியான பிசாசு படத்துக்கும் இந்த படத்துக்கும் திரில்லர் என்பதைத் தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை என்று மிஷ்கின் கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022 ஆம் ஆண்டே முடிவடைந்த நிலையில் இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் படம் ரிலீஸாகவில்லை.

இந்த படத்தில் சுமார் 20 நிமிடக் காட்சிகளில ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்திருப்பதாக முன்பு  படக்குழு அறிவித்திருந்தனர். ஆனால் அதன் பின்னர் அந்த காட்சிகளை எல்லாம் நீக்கிவிட்டதாக இயக்குனர் மிஷ்கின் அறிவித்து இருந்தார்.

2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட படம் தயாரிப்பாளரின் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக ரிலீஸாகவில்லை. இந்நிலையில் தற்போது ட்ரெய்ன் என்ற படத்தை இயக்கி வரும் மிஷ்கின் ஆனந்த விகடனுக்கு அளித்துள்ள நேர்காணலில் “பிசாசு 2 கண்டிப்பாக வரும். அந்த படத்தின் தயாரிப்பாளர் சில பிரச்சனைகளில் இருக்கிறார். இதுபோன்ற சூழலில் அவரைத் தொந்தரவு செய்யக் கூடாது. எப்போது வந்தாலும் அந்த படம் வெற்றி பெறும்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments