Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இயக்குனர் மணிகண்டனின் ஊருக்கு சென்று பாராட்டிய இயக்குனர் மிஷ்கின்!

இயக்குனர் மணிகண்டனின் ஊருக்கு சென்று பாராட்டிய இயக்குனர் மிஷ்கின்!
, செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (16:17 IST)
இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான கடைசி விவசாயி திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது.

இயக்குனர் மணிகண்டன் ஆண்டவன் கட்டளை படத்துக்குப் பிறகு 3 ஆண்டு இடைவெளியில் இப்போது கடைசி விவசாயி படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு ஆகிய இருவரும் கௌரவ வேடத்தில் நடித்துள்ளனர்.

கடந்த வாரம் இந்த படம் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றுள்ளது. அதில் முக்கியமான பாராட்டாக இயக்குனர் மிஷ்கின் படம் பார்த்துவிட்டு ‘தமிழ் சினிமாவில் 100 ஆண்டுகளில் வந்த மிகச்சிறந்த படம்’ என்று பாராட்டினார். அதோடு மனது நிறையாமல் இப்போது இயக்குனர் மணிகண்டனின் சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு சென்று அவருக்கு மாலை அணிவித்து கட்டித்தழுவி பாராட்டியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னது அரபிக் குத்து பாட்டு படத்துல இருக்காதா? அதிர்ச்சியைக் கிளப்பிய செய்தி!