Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் சேதுபதி படத்துக்கு இசையமைக்கும் மிஷ்கின்!

விஜய் சேதுபதி படத்துக்கு இசையமைக்கும் மிஷ்கின்!
, வெள்ளி, 10 நவம்பர் 2023 (07:50 IST)
பிசாசு 2 படத்தில் இணைந்து பணியாற்றிய மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி இப்போது ஒரு முழுநீளப் படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார் . இந்த படம் பிப்ரவரியிலேயே தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இன்னும் தொடங்கப்படவில்லை. இப்போது முன் தயாரிப்புப் பணிகள் நடப்பதாக சொல்லப்படுகிறது.

விஜய் சேதுபதி வேறு சில படங்களில் நடித்து வருவதால் இந்த படத்துக்கு தேதிகள் ஒதுக்காமல் இருந்தார். இந்நிலையில் இப்போது அவர் தேதிகள் ஒதுக்கியுள்ளதாகவும் விரைவில் இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் நடக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த படத்துக்கு இயக்குனர் மிஷ்கினே இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக அவர் விதார்த், பூர்ணா நடித்துள்ள டெவில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலைவர் 171 படத்தில் சிவகார்த்திகேயன்… லோகேஷ் போடும் திட்டம்!