Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு மரியாதையுடன் விவேக் இறுதிச்சடங்கு: தமிழக அரசுக்கு நடிகர் சங்கம் நன்றி!

Webdunia
ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (09:54 IST)
அரசு மரியாதையுடன் விவேக் இறுதிச்சடங்கு
நேற்று நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் காலமானதை அடுத்து அவருடைய இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்படும் என்றும் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
விவேக் அவர்களின் கலை மற்றும் சமூக சேவைகளுக்கு மரியாதை அளிக்கும் வகையில் அவருக்கு அரசு மரியாதையுடன் 78 குண்டுகள் முழங்க அவரது இறுதிச்சடங்கு நடந்தது. இந்த நிலையில் விவேக் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்ய அரசு ஆணை பிறப்பித்த தமிழக அரசுக்கு நன்றி என தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 
காலமான கலைமாமணி பத்மஸ்ரீ திரு விவேக் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் கலை மற்றும் சமூக சேவைகளை கவுரவிக்கும் விதமாக காவல்துறையின் மரியாதையுடன் அன்னாரது இறுதிச் சடங்கு நடத்த ஆணையிட்ட தமிழக அரசுக்கு அனைத்து நடிகர்கள் மற்றும் நடிகைகள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments