கோலிவுட் திரையுலகின் இளம் இயக்குனர் நரேன் கார்த்திகேயன், 'துருவங்கள் 16' படத்தின் வெற்றியை அடுத்து 'நரகாசுரன்' என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தை பிரபல இயக்குனர் கவுதம் மேனன் தயாரிப்பதாக கூறப்பட்டது.
ஆனால் இந்த படத்திற்காக கவுதம்மேனன் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றும், ஆனால் இந்த படத்தை வியாபாரம் செய்து அவர் இயக்கும் மற்ற படங்களுக்கு அந்த பணத்தை பயன்படுத்தி கொண்டதாகவும் நரேன் கார்த்திகேயன் குற்றம் சாட்டியதாக கூறப்பட்டது.
இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் ஆகியும் டப்பிங் உள்பட மற்ற பணிகளை தொடங்க முடியாமல் சிக்கல் ஏற்பட்டது. இதன் பின்னர் இருதரப்பும் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாகவும் இந்த படத்தில் இருந்து கவுதம் மேனன் விலகிவிட்டதாகவும் தெரிகிறது.
இதனையடுத்து இந்த படத்தின் மற்ற பணிகள் சுறுசுறுப்பாக முடிவடைந்து இன்று சென்சார் ஆகிவிட்டது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'UA' சான்றிதழ் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் இன்று இந்த படத்தின் போஸ்டர் ஒன்று கவுதம் மேனன் பெயர் இல்லாமல் வெளிவந்துள்ளது.