இயக்குனர் மோகன் ஜி ருத்ர தாண்டவம் படத்துக்குப் பிறகு செல்வராகவனைக் கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் ஆகிய இரு படங்களும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்க பட்டு வியாபார ரீதியாக வெற்றி பெற்ற திரைப்படங்கள். ஆனால் அந்த படத்தின் கதைக்களம் ஒடுக்கப்பட்ட மக்களை இழிவாக சித்தரிக்கும் விதமாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதனால் சர்ச்சைக்குரிய ஒரு இயக்குனராகவே மோகன் ஜி பார்க்கப்படுகிறார்.
இந்நிலையில் அவரின் மூன்றாவது படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் சாம் சி எஸ் இசையமைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நடிக்க முன்னணி நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்ராஜ் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.