Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிட்டு கொடுத்து ரொம்ப நாளாச்சு… அறம் 2 க்கு பிளான் போடும் நயன்தாரா!

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2023 (10:09 IST)
நயன்தாரா நடிப்பில் இயக்குனர் கோபிநயினார் இயக்கிய முதல் படமான 'அறம்' திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப்பெற்றது. இதனையடுத்து உடனடியாக இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் வர இருக்கிறது எனப் படக்குழு அறிவித்தது.

ஆனால் நயன்தாரா ஒத்துக்கொண்டு இருந்த சிலப் படங்களால் உடனடியாக படப்பிடிப்பைத் தொடங்க முடியாத நிலை உருவானது. அதனால் அதற்கிடையே கோபி நயினார் ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் புதியப்படம் ஒன்றை இயக்க ஆரம்பித்தார். ஆனால் அந்த படம் முழுதாக முடிக்கப்படாமல் கிடப்பில் கிடக்க, இப்போது ஆண்ட்ரியா நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் சமீபகாலமாக எந்த படமும் பெரிய அளவில் ஓடாத நிலையில் அவர் இப்போது அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கும் முடிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments