Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீபாவளி வாழ்த்துக்களுடன் ‘டெஸ்ட்’ போஸ்டரை வெளியிட்ட நயன்தாரா..!

தீபாவளி வாழ்த்துக்களுடன் ‘டெஸ்ட்’ போஸ்டரை வெளியிட்ட நயன்தாரா..!
, ஞாயிறு, 12 நவம்பர் 2023 (15:45 IST)
நடிகை நயன்தாரா நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ‘டெஸ்ட்’ என்பதும்,  இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்று தீபாவளியை முன்னிட்டு ‘டெஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு நடிகை நயன்தாரா தீபாவளி வாழ்த்துக்களையும் ரசிகர்களுக்கு தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். ‘டெஸ்ட்’ படத்தின் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டதாகவும் விரைவில் டீசர் மற்றும் ட்ரெய்லர் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மாதவன் மற்றும் சித்தார்த் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர் சஷிகாந்த், இயக்குனராக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்த படத்திற்கு சாக்சிஸ்ரீ கோபாலன் என்ற பெண் இசையமைப்பாளர் இசையமைத்து வருகிறார்.  நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகிய இருவரும் நாயகிகளாக இந்த படத்தில் நடித்து வருகின்றனர். டெஸ்ட் கிரிக்கெட் கதை அம்சம் கொண்ட   இந்த படம் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜிகர்தண்டா -2 படத்திற்கு வரவேற்பு - கார்த்திக் சுப்புராஜ் நெகிழ்ச்சி