கடந்த சில ஆண்டுகளில் சிம்பு ஹீரோவாக நடித்து வெளியான கடைசி திரைப்படம் என்றால் அது பத்து தல திரைப்படம்தான். அந்த படம் பெரியளவில் கமர்ஷியல் வெற்றியைப் பெறவில்லை என்ற போதிலும் படத்தின் பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டாகின.
அதிலும் குறிப்பாக நீ சிங்கம்தான் பாடல் மிகப்பெரிய ஹிட்டானது. அந்த பாடலின் இடையில் வரும் வரிகளான அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்று என்ற வரிகள் இன்ஸ்டா ரீல்களாக வைரல் ஆகின. சமீபத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தான் அதிகமாகக் கேட்கும் பாடல் அதுதான் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அந்த பாடல் ஸ்ட்ரீமிங் தளமான ஸ்பாட்டிஃபையில் 100 கோடி பார்வைகளைக் கடந்து சாதனைப் படைத்துள்ளது. இந்த சாதனையைப் படைக்கும் ரஹ்மானின் 20 ஆவது பாடல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.