Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யுடன் பேசமாட்டேன், அவரது வளர்ச்சி குறித்து எனக்கு தெரியாது: பிரபல சீனியர் நடிகர்

Webdunia
புதன், 1 ஜூலை 2020 (07:41 IST)
நடிகர் விஜய்யுடன் பேச மாட்டேன், சினிமாவில் அவர் எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்தார் என்பது எனக்கு தெரியாது என்று பிரபல சீனியர் நடிகர் ஒருவர் பேட்டியில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
தளபதி விஜய் அவர்கள் தமிழ் சினிமாவில் எந்த அளவுக்கு உயர்ந்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக சினிமா துறையில் உள்ளவர்கள் அவரது வளர்ச்சியை பார்த்து ஆச்சரியப்படாதவர்களே இல்லை எனலாம். 
இந்த நிலையில் பிரபல நடிகர் நெப்போலியன் தான் விஜய் படத்தை பார்ப்பது இல்லை என்றும் அவருடன் நடித்த ஒரு படத்தின் போது கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவருடன் பேசுவதும் இல்லை என்றும், தமிழ் சினிமாவில் அவருடைய வளர்ச்சி குறித்து தனக்கு தெரியாது என்றும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
 
விஜய் நடிப்பில் பிரபுதேவா இயக்கிய ‘போக்கிரி’ என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தவர் நெப்போலியன். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது விஜய்யுடன் தனக்கு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும், இந்த படத்தில் பிரபுதேவாவுக்காகவே நடித்தேன் என்றும் மேலும் நெப்போலியன் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
 
மகனின் சிகிச்சைக்காக தற்போது அமெரிக்காவில் இருக்கும் நெப்போலியன், கடைசியாக தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ‘சீமராஜா’ படத்தில் நடித்தார் என்பதும், ஹாலிவுட்டில் தற்போது ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments