ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவின் தலைநகரமாக சென்னை இருந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களின் படப்பிடிப்புகள் எல்லாம் சென்னையில் உள்ள ஸ்டுடியோக்களில்தான் நடந்தன. மற்ற மொழி நடிகர்கள் சென்னையிலேயே பெரும்பாலும் தங்கி இருப்பார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் இந்த வழக்கம் மாறி அவரவர் மாநிலங்களில் படப்பிடிப்பை நடத்த ஆரம்பித்தனர்.
அந்த வழக்கமும் இப்போது மாறி வருகிறது. அனைத்து மொழியினரும் இப்பொது படப்பிடிப்புக்காக ஐதராபாத்துக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். தமிழ் சினிமாவில் அஜித், ரஜினி ஆகியோரின் படங்கள் தொடர்ந்து ஐதராபாத்தின் ராமோஜி ராவ் ஸ்டுடியோவில்தான் நடக்கின்றன. கிட்டத்தட்ட இன்று தென்னிந்திய சினிமாவின் தலைநகராக ஐதராபாத்தான் உள்ளது.
இந்நிலையில் சென்னையில் பூந்தமல்லி அருகே 150 ஏக்கர் பரப்பளவில் புதிய ஸ்டுடியோ ஒன்றை நிர்மாணிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கான நில ஒதுக்கீடு விரைவில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.