Webdunia - Bharat's app for daily news and videos

Install App

#KGFChapter2: திடீர் டிரெண்டிங்கின் பின்னணி என்ன??

Webdunia
வியாழன், 4 ஜூன் 2020 (12:14 IST)
சமூக வலைத்தளமான டிவிட்டரில் #KGFChapter2 என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 
 
இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கவைத்த பிரமாண்ட படைப்பான பாகுபலி தமிழ், தெலுங்கு சினிமாவுலகில் மாபெரும் வரலாற்று சாதனையை படைத்தது. அதனை அடுத்து முதன் முறையாக கன்னட படமொன்று தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதென்றால் அது நடிகர் யாஷ் நடித்த கேஜிஎப் திரைப்படம் தான். 
 
கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி வெளிவந்த இப்படத்தில்,கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று என்று பெருமையோடு அழைக்கப்படும் நடிகர் யாஷ் தனது அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தி இந்திய சினிமாவுலகில் பரவலான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.
 
இதுவரை வெளிவந்த கன்னட திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது.
இந்நிலையில் தற்போது KGF படத்தின் இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதி 23-10-2020 என்று படக்குழு அதிகாரபூர்வமாக முன்ன்ரே அறிவித்தது.
 
ஆனால் தற்போது இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்காக சமூக வலைத்தளமான டிவிட்டரில் #KGFChapter2 என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டாகி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments