ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்ஃபி, ராபர்ட் டௌனி ஜூனியர் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி வெளியான படம் ஓப்பன்ஹெய்மர். இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் மீது போடப்பட்ட அணுகுண்டுகளை கண்டுபிடிக்க காரணகர்த்தாவான விஞ்ஞானி அனுகுண்டின் தந்தை என அழைக்கப்படும் ராபர்ட் ஓப்பென்ஹெய்மரின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியாக உருவாகியுள்ளது இந்த திரைப்படம்.
சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருது விழாவில் 7 விருதுகளை வென்று சாதித்தது. இதையடுத்து படம் தற்போது ஜப்பானில் ரிலீஸாக உள்ளது. படம் வெளியாகி 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில் தற்போது இந்த படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.
இந்தியாவில் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் ஜியோ சினிமாஸ் தளத்தில் வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பு இந்திய ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.