Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே போரிங்... எப்போ தான் இந்த லாக்டவுன் முடியும்? உங்க வாட்ஸ் ஆப் நம்பர் கொடுங்க...!

Webdunia
புதன், 15 ஜூலை 2020 (09:58 IST)
கேரளத்து பைங்கிளியான நடிகை ஓவியா தமிழில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான களவாணி படத்தின் மூலம் கதநாயகியாக அறிமுகமானார். கிராமத்து பெண்ணாக முதல் படத்திலே கியூட்டான நடிப்பை வெளிப்படுத்திய ஓவியாவுக்கு அந்த ஆண்டிற்கான சிறந்த அறிமுக நாயகி விருது வழங்கி கௌரவித்தது விஜய் அவார்ட்ஸ்.

இதையடுத்து மெரினா, கலகலப்பு உள்ளிட்ட படங்கள் சிறப்பான வெற்றிப்படமாக அமைந்தது. அவரது உண்மையான குணத்தை போலவே படங்களிலும் எந்த வித seriousnessம் இல்லாமல் காமெடியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார். பின்னர் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்று அந்த நிகழ்ச்சியை பெரும் பிரபலமாக்கி அனைவரையும் டிவி முன்பு அமர வைத்தது ஓவியாதான். ஒரே ஒரு banana கொடுங்க பிக்பாஸ், கொக்கு நட்ட கொக்கு நட்ட , நீங்க shut up பண்ணுங்க , மருத்துவ முத்தம் இப்படி அந்த சீசனின் முழு வெற்றிக்கும் ஓவியா தான் காரணம் என்றால் அது மிகையாகாது.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் ஓவியா நடித்த 90ml படம் பெரும் சர்ச்சையை சந்தித்து ஓவியாவின் பெயரை கெடுத்தது. ஆனால், அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கூலாக தனது அடுத்தடுத்த படங்களில் அதீத கவனத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் தற்ப்போது இன்ஸ்டாவில் " Paulo Coelho புக் படித்துக்கொண்டிருக்கும் போட்டோவை வெளியிட்டு " எப்போது இந்த லாக்டவுன் முடியும்..? என சலிப்புடன் கேட்டுள்ளார். இதற்கு கமெண்ட்ஸ் செய்து வரும் சில ரசிகர்கள் உங்களுக்கு போர் அடிக்குதுன்னா நம்பர் குடுங்க வாட்ஸ் ஆப்'ல் வந்து பேசுறோம் என கூறி வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

When will #lockdown be over?

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments