இயக்குனர் பா ரஞ்சித்தின் சமீபத்தைய படமான சார்பட்டா பரம்பரை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய காலா படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில் அவர் சில ஆண்டுகள் இடைவெளி எடுத்துக்கொண்டு குத்துச்சண்டையை மையமாக வைத்து சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கி அதை அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியிட்டார். படத்தின் வித்தியாசமான திரைக்கதை காரணமாக அதிரி புதிரி ஹிட் அடித்தது.
இதையடுத்து மீண்டும் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை எட்டினார் பா ரஞ்சித். அடுத்து விக்ரம்மை வைத்து கேஜிஎப் பாணியில் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் முன்னணி ஓடிடி நிறுவனத்துக்காக படம் ஒன்றை இயக்க அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இந்த படத்துக்காக அவருக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.