Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘சின்ன சூப்பர் ஸ்டாருக்கு’ ஜோடி யார்?

Webdunia
வியாழன், 8 ஜூன் 2017 (18:41 IST)
‘காலா’வில் சின்ன வயது ரஜினியாக நடிக்கும் தனுஷுக்கு, ஜோடியாக யார் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.


 

 
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படம் ‘காலா’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் இருந்தே ஷூட்டிங்கில் கலந்துகொண்ட ரஜினி, தொடர்ந்து 11 நாட்கள் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். மும்பையில் இருந்து இன்று மதியம் சென்னை திரும்பிய ரஜினி, இன்னும் இரண்டு மாதத்தில் மீதமுள்ள ரசிகர்களைச் சந்திக்க இருப்பதாக விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
 
இந்தப் படத்தில், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டில், சாக்‌ஷி அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இந்த நிலையில், சின்ன வயது ரஜினியாக தனுஷ் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. அப்படி அவர் நடித்தால், அவருக்கு ஜோடியாக எந்த நடிகை நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ‘பவர் பாண்டி’ படத்தில் சின்ன வயது ராஜ்கிரணாக நடித்த தனுஷுக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ்நாடு அரசிற்கு நன்றி கூறிய கவுதம் கார்த்திக்!

பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் பத்திரிக்கையாளர்களுடன்- நடிகை சாக்ஷி அகர்வால்!

தமிழில் வருகிறது நருட்டோ ஷிப்புடென்..! – ரிலீஸ் தேதியை அறிவித்த Sony YAY!

மஹத் ராகவேந்திரா-மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் 'காதலே காதலே' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

இளம் வயதினரிடையே நட்பு மற்றும் அவர்களது கனவுகள் குறித்து பேசும் படம் - "நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே"

அடுத்த கட்டுரையில்
Show comments