Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லேட்டா வந்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த "பட்டாஸ்" படக்குழு!

Webdunia
திங்கள், 13 ஜனவரி 2020 (14:42 IST)
தமிழ் சினிமாவில் கொஞ்சம் கூட கேப் விடமால் அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களை தொடர்ந்து கொடுத்து வரும் நடிகர் தனுஷ் அசுரன் படத்தின் அசாத்திய வெற்றிக்கு பிறகு தற்போது "பட்டாஸ் " படத்தில் நடித்து வருகிறார். செந்தில்குமார் இயக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

தனுஷுக்கு ஜோடியாக சினேகா,மெஹரீன் பிர்சாடா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். அண்மையில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இளமையான தோற்றத்தில் துரு துறுவென இப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இரட்டை இளம் இசையமைப்பாளர்களான விவேக் மெர்வின் இசையமைக்கின்றனர்.
 
வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 16 ஆம் தேதி ரிலீசாகவுள்ள இப்படத்தின் சென்சார் சர்டிபிகேட்டை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பட்டாஸ் படத்தின் நீளம் 2 மணி நேரம் 21 நிமிடங்கள் என்று அறிவித்துள்ளனர். இப்படி அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து வருவதால் தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோட் படத்தின் ஓடிடி ஸ்ட்ரீமிங் எப்போது?... வெளியான தகவல்!

இன்று ஒரே நாளில் 6 படங்கள் ரிலீஸ்… ரசிகர்கள் ஆதரவு எந்த படத்துக்கு?

விடாமுயற்சி படத்துடன் ஷங்கரின் கேம் சேஞ்சர் திரைப்படம்!

ஷங்கர் & ராம்சரண் கூட்டணியின் கேம் சேஞ்சர் ரிலீஸ் எப்போது?... இசையமைப்பாளர் தமன் வெளியிட்ட தகவல்!

சன்னி லியோன் கிட்ட பேச முடியல… அதுக்காகவே இந்தி கத்துக்கணும்- இயக்குனர் பேரரசு

அடுத்த கட்டுரையில்
Show comments