Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் பவன் கல்யாண் – அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (18:42 IST)
மலையாள ஹிட் படமான அய்யப்பனும் கோஷியும் படத்தில் பவன் கல்யான் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் என்ற இரு முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். மலையாளத்தின் பிரபலமான திரைக்கதை எழுத்தாளர் சாச்சி இயக்கிய முதல் திரைப்படமான இது அங்கே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அத்திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி தமிழ்நாட்டிலும் கவனம் ஈர்த்தது. போலிஸ் அதிகாரி ஒருவருக்கும் ராணுவ வீரர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் மிகச்சிறிய மோதல் எந்த அளவுக்கு சென்று இருவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே கதை.

இந்த படத்தை பல்வேறு மொழிகளிலும் ரீமேக் செய்ய போட்டிகள் நிலவி வருகின்றன. தெலுங்கில் முன்னணி நடிகரான பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்க உள்ளதாக அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. படத்தின் அய்யப்பன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்கிறார். கோஷி கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிகிறது. வரிசையாக பவன் கல்யாண் ரீமேக் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவித்த ‘குட் பேட் அக்லி’ படக்குழு.. என்ன ஆச்சு விடாமுயற்சி?

அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த தமிழ் நடிகர்.. வைரல் புகைப்படம்..!

'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க  டிஜிட்டல் பிரீமியர் ஸ்ட்ரீமாகவுள்ளது !

“சங்கீதம் இல்லாமல் வாழ்க்கை இல்லை” 'மாத்திக்கலாம் மாலை' ஆல்பம் வெளியீட்டு நிகழ்வில்- சுகாசினி பேச்சு!

விஜய் தவறான வழியில் செல்வது வருத்தமாக உள்ளது: இயக்குனர் மோகன் ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments