கிரிக்கெட் மைதானத்தில் நேரடி ஒளிபரப்புக்கு ட்ரொன் கேமராவை பயன்படுத்த விதிமுறைகளுடன் கூடிய அணுமதியை மத்திய அரசு பிசிசிசிக்கு வழங்கியுள்ளது.
கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்போது, மைதானத்தில் நேரடியாகச் சென்று போட்டிகளைக் காணமுடியாக ரசிகர்களாகவும், அப்போட்டிகள் ஒரு கோப்புக்காட்சிகளாக சேமித்து வைக்கவும் வீடியோ கேமராவால் ஒளிப்பதி செய்யப்படுவது வழக்கம்.
இதுவரை அதிகத் தொழில்நுட்பத்திறன் மற்றும் சக்தி கொண்ட கேமராக்களே இந்தியாவிலுள்ள மைதானங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், ட்ரோன் வகை கேமராக்களுக்கு அனுமதி வேண்டிய பிசிசை மத்திய அரசிடன் கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து, தற்போது ட்ரோன் கேமராவைப் பயன்படுத்த விதிமுறைகளுடன் கூடிய அனுமதியை பிசிசிஐக்கு அனுமதி வழங்கியுள்ளது மத்திய அரசு. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.