Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கு பாமக எதிர்ப்பு: தியேட்டரில் பிரச்சனை வருமா?

'எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கு பாமக எதிர்ப்பு: தியேட்டரில் பிரச்சனை வருமா?
, திங்கள், 7 மார்ச் 2022 (17:42 IST)
சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வரும் பத்தாம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு பாமக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து பாமக மாநில செயலாளர் விஜயவர்மன் என்பவர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் இந்த படம் திரையரங்குகளில் ரிலிஸ் ஆகும் போது பிரச்சனை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜயவர்மன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 
திரைப்பட நடிகர் சூர்யா நடித்து கடந்த 2021 நவம்பர் 3ஆம் தேதி வெளியான திரைப்படம் ’ஜெய்பீம்.  ஞானவேல் இயக்கிய இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து நடிகர் சூர்யா நடித்துள்ளார். இருளர் சமுதாய மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டுள்ள, உண்மை சம்பவம் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம். அதில் வழக்கறிஞர் சந்துரு அதே பெயரில் இருக்க, கதாபாத்திரத்தில் வந்த அனைவரும் அதே கதாபாத்திரத்தில் நடிக்க, அந்தோணிசாமி என்ற தலித் கிறிஸ்தவர் மட்டும் குருமூர்த்தி என்ற கதாபாத்திரத்தை வன்னியராக சித்தரிக்கப்பட்டுள்ளது. 
 
உதவி ஆய்வாளராக நடித்தவர் ஒரு ஜாதி வெறியர் போல சித்தரித்து, வன்னியர்களின் அடையாளமாக அக்னி கலசத்தை அவர் வீட்டில் காட்சிப்படுத்தி, காவல் உதவி ஆய்வாளரை வன்னியர் சமுதாயத்தைச் சார்ந்தவர் என்று ஒட்டுமொத்த வன்னிய மக்கள் சமுதாய மக்கள் ஜாதி வெறி வன்மம் உள்ளவர்கள் போல் காட்டியுள்ளனர் .
 
சகோதரத்துவமாக உள்ள இருளர், வன்னியர் சமுதாயத்தில் ஜாதி வன்மத்தை தூண்டும் விதமாக இத்திரைப்படம் எடுத்திருப்பது வன்னியர்களை கொச்சைப் படுத்தும் விதமாகவும் வன்முறையாளர்களாக தொடர்ந்து சித்தரித்து வரும் நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை அவர் வன்னிய மக்களிடம் பொது மன்னிப்பு கேட்காத வரை கடலூர் மாவட்டத்தில் ஒளிபரப்ப அனுமதிக்க கூடாது என பாட்டாளி மக்கள் கட்சி சார்பாகவும், வன்னியர் சங்கம் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கீர்த்தி சுரேஷ் தோத்துப்போயிட்டாங்க... காந்தாரி பாடலுக்கு வேற லெவல் ஆட்டம் போட்ட சாக்ஷி!