Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாதர் சங்கத்திடம் மன்னிப்பு கேட்ட "பொன்மகள் வந்தாள்" இயக்குநர்!

Webdunia
சனி, 30 மே 2020 (09:03 IST)
ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிப்பில் ஜெஜெ பெடரிக் இயக்கிய ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் நேற்று முதல் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு தற்போது பெருவாரியான பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக ஜோதிகா மற்றும் பார்த்திபன் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குறித்து தவறான சித்தரிப்பு இடம் பெற்றிருப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து படத்தின் இயக்குனர்  ஜெஜெ பெடரிக் அச்சங்கத்துக்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், " பொன்மகள் வந்தால் படத்தில் AIDWA அமைப்பின் பெயர் பயன்படுத்தப்பட்டது எங்கள் கவனக் குறைவால் நடந்த ஒன்று. அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. அதற்காக தார்மீகமாய் மன்னிப்புக் கேட்பதோடு AIDWA இயக்கத்தின் பெயரையும் லோகோவையும் உடனடியாக நீக்க உறுதியளக்கிறோம்.  இந்த திரைப்படத்துக்கான கள ஆய்வில் அவர்களின் போராட்டங்களிலிருந்து நிறைய செய்திகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் நாங்கள் நன்றிக் கடன்பட்டுள்ளோம்” என்று தெளிவான விளக்கத்துடன் மன்னிப்பு கேட்டதுடன் பிரச்சனையை சுமுகமாக முடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஹாட்டான போஸ் கொடுத்த ‘நேஷனல் க்ரஷ்’ ராஷ்மிகா!

இந்தியன் 3 மீண்டும் ஷூட்டிங் போக இத்தனை கோடி வேண்டும்… வெடிகுண்டை தூக்கிப் போட்ட ஷங்கர்!

சூர்யா சொன்னபடி நெருப்பு போல் இருந்ததா ‘கங்குவா’ .. திரைவிமர்சனம்..!

’அமரன்’ படத்தை தூக்க மறுத்த தியேட்டர்கள்.. ‘கங்குவா’ ரிலீஸாகியும் குறையாத கூட்டம்..!

அமரன் படத்தின் நடிகர் தேர்வு தவறென்று முதலில் நினைத்தேன்… இயக்குனரைப் பாராட்டிய ஞானவேல் ராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments