நடிகரும் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பியுமான சுரேஷ் கோபி, துக்க வீட்டில் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டுள்ள சம்பவம் கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வட்டவடா பகுதியை சேர்ந்த இந்திய மாணவர் சங்க தலைவர் அபிமன்யூ கல்லூரியில் பிளக்ஸ் வைப்பது குறித்த தகராறில் எதிரணி மாணவர்கள் அவரை கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். இச்சம்பவம் கேரளாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அபிமன்யூ ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது குடும்பத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தத்தெடுத்துள்ளது.
இந்நிலையில் நடிகரும் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பியுமான சுரேஷ் கோபி, மாணவனின் வீட்டிற்கு சென்று அபிமன்யூ குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.
துக்கம் விசாரித்து விட்டு வெளியே வந்த சுரேஷ்கோபி, அங்கு கூடியிருந்த ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். துக்க நிகழ்ச்சியில் சுரேஷ்கோபி இப்படி சிரித்துக்கொண்டே செல்பி எடுத்த நிகழ்வு கேரளாவில் கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.