திரையுலகை சேர்ந்தவர்கள் காப்பி பேஸ்ட் செய்வதில் கைதேர்ந்தவர்கள் என்பது தெரிந்ததே. சமீபத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் படம் ஒன்று கூட இதற்கு முன்னர் வந்த ஒருசிலபடங்களின் தொகுப்பு என நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டது.
இந்த நிலையில் கதை, காட்சிகள், டைட்டில் ஆகியவற்றை காப்பியடித்து வந்த திரையுலகினர் கடந்த சமீப காலமா க போஸ்டர் டிசைனிலும் காப்பியடிக்க தொடங்கிவிட்டனர். இந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் போஸ்டர் ஏற்கனவே வெளிவந்த ஒரு ஹாலிவுட் படமான 'டாக் ஹவுஸ்' என்ற படத்தின் போஸ்டரின் அப்பட்டமான காப்பி என்று தெரியவந்துள்ளது.
இந்த இரண்டு போஸ்டர்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். திரையுலகில் காப்பியடிப்பதில் காட்டும் ஆர்வத்தை சொந்தமாக சிந்தித்து செயல்படுவதில் இருக்க வேண்டும் என்பதே அனைவருடைய கோரிக்கையாக உள்ளது.