Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகுபலி பிரபாஸின் 4 மொழி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்

Webdunia
புதன், 8 ஜூலை 2020 (11:48 IST)
பாகுபலி, பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களில் உலக அளவில் புகழ்பெற்ற நடிகர் பிரபாஸ் அடுத்ததாக ’சாஹோ’ என்ற படத்தில் நடித்தார். இந்தத் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது அவர் நடித்து கொண்டிருக்கும் ’பிரபாஸ் 20’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் ’பிரபாஸ் 20’ படம் குறித்த புதிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 10ஆம் தேதி காலை 10 மணிக்கு அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் 
 
இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், என 4 மொழிகளிலும் தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ராதா கிருஷ்ணகுமார் என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனவைரஸ் குரங்கு முடிந்தது தொடங்கும் என்றும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments