கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ப்ரதீப் ரங்கநாதன் அடுத்து லவ் டுடே என்ற படத்தை இயக்கி அதில் கதாநாயகனாகவும் அறிமுகமானார். அந்த படம் அதிரி புதிரி ஹிட் அடித்து 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது.
இதையடுத்து அவர் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸான டிராகன் திரைப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இப்படி முதல் இரண்டு படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் தொடாத வியாபார எல்லையை ப்ரதீப் தொட்டிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது அவர் நடித்துவரும் Dude என்ற படம் தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் அப்யங்கர் இசையமைக்க, மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார். ஏற்கனவே தீபாவளிக்கு மாரி செல்வராஜின் பைசன் மற்றும் கார்த்தியின் சர்தார் 2 ஆகிய படங்கள் ரிலீஸாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.