விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான எல்.ஐ.கே என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர் மற்றும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், கோமாளி, லவ் டுடே, டிராகன் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான எல்.ஐ.கே என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், அந்த படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 18 என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அவர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவான டியூட் என்ற படம் தீபாவளி அன்று, அதாவது அக்டோபர் 16 அல்லது 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, செப்டம்பர், அக்டோபர் என இரண்டு மாதங்களில் பிரதீப் நடித்த இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து வரிசையாக வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகிபாபு, மிஷ்கின், ஆனந்த்ராஜ், மாளவிகா, சுனில் ரெட்டி, கெளரி கிஷான், மணிமேகலை, ராதாரவி உள்ளிட்ட பலர் 'எல்.ஐ.கே படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை ரெளடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.