Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புஷ்பா படத்தின் டீசர் செய்த சாதனை!

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (15:33 IST)
அல்லு அர்ஜுன் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகும் புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் டிசம்பர் 17 ஆம் தேதி ரிலிஸ் ஆகிறது.

பிரபல தெலுங்கு நடிகர் அர்ஜூன் அலா வைகுந்தபுரம்லூ படத்தின் வெற்றிக்குப் பின்னர் நடிக்கும் ’புஷ்பா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மசாலா இயக்குனர் சுகுமார் இயக்கி வருகிறார். ஆந்திராவில் நடக்கும் செம்மரக் கடத்தல் பற்றியக் கதை என சொல்லப்பட்டதால் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கொரோனா முதல் அலையின் போது  காரணமாக படப்பிடிப்பு 6 மாதங்களுக்கு மேல் தடைபட்டது. இந்த படத்தில் மலையாள நடிகரான பஹத் பாசில் நடிக்கிறார்.

இரண்டு பாகங்களாக உருவாகும் படத்தின் முதல் பாகம் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டது. இந்நிலையில் முதல் பாகத்தின் ரிலீஸ் தேதி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையின் போது ரிலிஸாக உள்ளது. பேன் இந்தியா படமாக உருவாகும் இந்த திரைப்படத்தின் தமிழக விநியோக உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் வெளியான இந்த படத்தின் டீசர் 20 லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது. இதுவரை வெளியான தென்னிந்திய படங்களில் இந்த அளவு எண்ணிக்கையில் எந்த படமும் லைக்குகளைப் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments