Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கொட்டேஷன் கேங்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா

J.Durai
வெள்ளி, 28 ஜூன் 2024 (12:02 IST)
ஃபிலிம்னாட்டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், இயக்குநர் விவேக்குமார் கண்ணன் இயக்கத்தில், நடிகர்கள் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், ப்ரியாமணி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘கொட்டேஷன் கேங்’
 
 அடுத்த மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. 
 
இந் நிகழ்வினில் பேசிய நடிகை அக்‌ஷயா .....
 
ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், ப்ரியாமணி என சீனியர் நடிகர்கள் எல்லோருமே எங்களிடம் அவ்வளவு அன்பாக நடந்து கொண்டார்கள். படத்தில் ப்ரியாமணி எனக்கு நடிப்பதற்கான ஸ்பேஸ் கொடுத்தார். அது பெரிய விஷயம்! படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைக் கொடுங்கள்"
 
தயாரிப்பாளர் காயத்ரி சுரேஷ்.....
 
எனக்கு தயாரிப்பாளராக வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விவேக்கிற்கு நன்றி. மல்டி ஸ்டார்ஸ் படம் என்றால் நிறைய பிரச்சினைகள் வரும் என்று நினைத்தோம். ஆனால், அதெல்லாம் இல்லாமல் ப்ரியாமணி, சன்னி லியோன், அக்‌ஷயா என எல்லோருமே சிறப்பாக நடித்துக் கொடுத்தார்கள். எல்லோருக்கும் நன்றி".
 
இணைத் தயாரிப்பாளர் விவேகானந்தன்....
 
இது தமிழ்ப்படம். ஆனால், இந்திப்படம் போல எடுக்கப்பட்டுள்ளது. நடிகர்கள், டெக்னீஷியன்ஸ் என எல்லோருமே சிறப்பாக வேலை செய்திருக்கிறார்கள். இயக்குநர் பாலாவுக்கு பிறகு இயக்குநர் விவேக்கைதான் சொல்வேன். அந்த அளவுக்கு சிறப்பாக படத்தை எடுத்துள்ளார். படம் நன்றாக வர பிராத்திக்கிறேன்".
 
நடிகை ப்ரியாமணி .....
 
இயக்குநர் விவேக்கிற்கு நன்றி. இவர் என்னிடம் சொன்ன முதல் கதை சில காரணங்களால் டேக் ஆஃப் ஆகவில்லை. இரண்டாவது சொன்ன இந்த கதை பிடித்துவிட்டது. என்னுடைய கரியரில் காண்ட்ராக்ட் கில்லர் ரோல் இதுவரை செய்ததில்லை. இயக்குநர் விவேக்கின் சகுந்தலா கதாபாத்திரத்தை நன்றாக நடித்திருக்கிறேன் என நம்புகிறேன். தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் சிறப்பாக பணியாற்றினார்கள். எனக்கும் அக்‌ஷயாவுக்கும்தான் நிறைய காம்பினேஷன் காட்சிகள். அக்‌ஷயா சிறப்பாக செய்திருக்கிறார். சன்னி பற்றி வேறொரு இமேஜ் உங்களுக்கு இருக்கலாம். ஆனால், இந்தப் படத்தில் அவருடைய பத்மா கதாபாத்திரம் உங்கள் எண்ணத்தை மாற்றிவிடும். ஜாக்கி ஷெராப் சாரும் எங்களுக்கு சப்போர்ட்டாக இருந்தார். படம் ஜூலையில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்
 
நடிகை சன்னி லியோன் .....
 
இந்தப் படத்தில் எனக்கு நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளது. என்னைப் பற்றிய உங்கள் எண்ணத்தை இந்தப் படம் நிச்சயம் மாற்றும். படம் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்”.
 
இயக்குநர் விவேக்குமார் கண்ணன்....
 
முதலில் ப்ரியாமணி மேம் வைத்துதான் படத்தை ஆரம்பித்தோம். அடுத்து ஜாக்கி ஷெராப், சன்னி லியோன் என அடுத்தடுத்து வந்தார்கள். காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்துவது எளிதான விஷயம் கிடையாது. கேமரா மேன், ஸ்டண்ட் மாஸ்டர், மேக்கப் ஆர்டிஸ்ட் என எல்லோருமே சிறப்பாக பணி செய்தார்கள். ப்ரியாமணி, சன்னி லியோன், ஜாக்கி ஷெராப், அக்‌ஷயா என எல்லோருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். 
 
பேபி சாராவுக்கு சிறப்பான கதாபாத்திரம் படத்தில் இருக்கிறது. தியேட்டரில் உங்களுக்கு அந்த அனுபவம் கிடைக்க வேண்டும் என்றுதான் நிறைய வேலை பார்த்திருக்கிறோம். படம் ஜூலையில் பாருங்கள்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments