பிரபாஸ் நடித்து வரும் ராதே ஷ்யாம் படத்தின் அப்டேட் ஒன்றை காதலர் தினத்தன்று வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சாஹோ படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் அடுத்த படம் ராதே ஷ்யாம்.. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ராதா கிருஷ்ணன் இயக்கி வருகிறார். இந்த பிரம்மாண்டமான படத்துக்கு இசையமைப்பாளராக ஏ ஆர் ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த படம் முழுக்க முழுக்க காதல் படம் என சொல்லப்பட்டது. ஆனாலும் பிரபாஸின் சம்பளம் எல்லாம் சேர்த்து மொத்தமாக 200 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் அப்டேட் ஒன்று காதலர் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் லுக் போஸ்டர் வெளியாகிவிட்ட நிலையில் இப்போது டீசர் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.