Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசின் உத்தரவு அதிர்ச்சி அளிக்கின்றது: ராகவா லாரன்ஸ்

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2020 (08:20 IST)
தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பொதுமக்களுக்கு நேரடியாக உணவு, சமையல் பொருட்கள் வழங்க தமிழக அரசு நேற்று தடை விதித்த நிலையில் இந்த தடை உத்தரவுக்கு கமல்ஹாசன், முக ஸ்டாலின் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இதுகுறித்து ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:
 
அனைவருக்கும்‌ வணக்கம்‌! "கொரோனா" தடுப்பு நடவடிக்கையில் மாண்புமிகு தமிழக முதல்வர்‌ திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின்‌ தலைமையிலான தமிழக அரசு மிகவும்‌ சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்‌! அதே சமயம் இந்த "கொரோனா" ஊரடங்கினால்‌ சரிவர உணவுப்‌ பொருட்கள்‌ கிடைக்காமல்‌ பாதிக்கப்பட்டூள்ள மக்களுக்கு இனி தன்னார்வலர்களோ, தனி நபர்களோ உணவுப்‌ பொருட்கள்‌ எதையும்‌ வழங்க கூடாது!" என்று தடை விதிக்கப்பட்டுள்ளது!
 
இந்த தடை உத்தரவை தயவுசெய்து மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று மிகவும்‌ பணிவுடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌! அரசாங்கமே கடைநிலை பகுதி வரை அனைவருக்கும்‌ விரைவாக உணவுப்‌ பொருட்களை
தந்திட இயலாது என்பதே எதார்த்தம்‌! அவ்வகையில்‌ ஏழை எளிய மக்களுக்கு உதவிட வேண்டும் எனும்‌ நல்லெண்ணத்திலேயே, நான்‌ கடந்த வாரம்‌ "கொரோனா" தடுப்பு நிவாரண நிதியை அளித்தக்‌ கையோடு அடுத்தகட்டமாக, வருகிற 14 ஆம்‌ தேதி தமிழ்ப்புத்தாண்டு முதல்‌, நானும்‌ எனது நண்பர்களும்‌, தமிழக அரசுடன்‌ இணைந்து, ஏழை எளிய மக்களுக்கு உதவிடும்‌ வகையில்‌ சில சேவை திட்டங்களை செயல்படுத்த தயாராகி வருகிறோம்‌!
 
இந்நிலையில்‌ தான்‌ நமது தமிழக அரசின்‌ இந்த தடை உத்தரவு என்‌ போன்ற தன்னார்வலர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது! நமது அரசு வேண்டுமானால்‌ இப்படி செய்யலாம்‌ தன்னார்வலர்கள்மக்களுக்கு பொருட்களை வழங்குகிற நடைமுறையில்‌ இன்னும்‌ கெடுபிடியான சட்ட நெறிமுறைகளை வகுத்து, அதனை போலிசாரின்‌ துணையோடு கடைப்பிடிக்குமாறு உத்தரவிடலாம்‌! நம்மைப்‌ பொறுத்தவரை, "கொரோனா"” நோய்‌ தொற்று விஷயத்தில்‌ தமிழக அரசு எடுத்து வருகிற அனைத்து நடவடிக்கைகளும்‌ அருமை! அற்புதம்‌! அதை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்‌!
 
அதே நேரம் காய்கறி பழங்களை இலவசமாக கொடுக்கக்‌ கூட மனமில்லாமல்‌ குப்பையில்‌ கொட்டுகிறவர்கள்‌ இருக்கிற இதே நாட்டில்தான்‌, அன்பை அளவில்லாமல்‌ கொட்டுகிற தன்னார்வலர்களும்‌ இருக்கவே செய்கிறார்கள். தன்னார்வலர்கள்‌ நேரடியாக உதவக்‌ கூடாது" என்கிற உத்தரவை மட்டும்‌ மறுபரிசீலனை செய்யுமாறு மாண்புமிகு தமிழக முதல்வர்‌ அவர்களை மிக பணிவன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌!

இவ்வாறு ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வித்தியாசமான கிளாமர் உடையில் போட்டோஷூட் நடத்திய பூஜா ஹெக்டே!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

‘விஜய் காசு கொடுக்காமல் கூட்டம் கூட்டியுள்ளார்… போஸ் வெங்கட்டின் கருத்து ஏற்புடையதல்ல’ – இயக்குனர் அமீர் காட்டம்!

கங்குவா தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாதது நல்லதுதான்… தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சொல்லும் காரணம்!

ஓவர் பில்டப்பா இருக்கே… நயன்தாரா திருமண வீடியோவின் டிரைலர் எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments