Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விவாதத்தைக் கிளப்பிய ரஜினியின் ஜெயிலர் பாடல்… எழுதியது பிரபல இயக்குனரா?

விவாதத்தைக் கிளப்பிய ரஜினியின் ஜெயிலர் பாடல்… எழுதியது பிரபல இயக்குனரா?
, புதன், 19 ஜூலை 2023 (07:34 IST)
ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தின் தோல்விக்குப் பிறகும், நெல்சன் பீஸ்ட் படத்தின் தோல்விக்குப் பிறகும் இணைந்துள்ள திரைப்படம் ஜெயிலர். இதனால் வழக்கமாக ரஜினிகாந்த் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு இந்த படத்துக்கு இல்லை. ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் எனும் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ஹுக்கும் என்ற பாடல் வெளியானது. இந்த பாடலில் ரஜினிக்கு பில்டப் கொடுப்பதற்காக மாஸான வரிகள் இடம்பெற்றது. ஆனால் பாடலின் சில வரிகள் தமிழ் சினிமாவின் மற்ற நடிகர்களை தாக்குவது போல அமைந்திருந்தது.

இது சமுகவலைதளங்களில் விவாதங்களை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இண்ட பாடலை எழுதியவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் சுப்பு என்பவர் இந்த பாடலை எழுதியுள்ளார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான சுட்டகதை படத்தை இயக்கியவராம். இயக்குனர் நெல்சனின் நெருங்கிய நண்பரான இவருக்கு ரஜினி படத்தில் வாய்ப்புக் கொடுத்துள்ளார் நெல்சன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகனை புகைப்படம் எடுக்க வேண்டாம் எனக் கோரிக்கை வைத்த சூர்யா!