தமிழக அரசின் கொரோனா நிதியாக திரையுலக பிரபலங்கள் பலர் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் நிதி வழங்கி கொண்டிருக்கும் நிலையில் சற்று முன்னால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் மருமகன் விஷாகன் இணைந்து ரூபாய் ஒரு கோடி நிதி வழங்கி உள்ளனர்.
இன்று காலை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ரூபாய் 1 கோடிக்கான காசோலையை நிவாரண நிதியாக முதல்வரிடம் அளித்தார். அப்போது சௌந்தர்யாவின் கணவரும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. ரஜினிகாந்தின் மகள் ரூபாய் ஒரு கோடி நிதி அளித்த தகவலை ரஜினிகாந்த் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், ரஜினிகாந்த் மருமகன் விஷாகன் வணாங்காமுடி மற்றும் அவரது தந்தை சூலூர் வணங்காமுடி வணங்காமுடி இணைந்து நடத்திவரும் ஆபெக்ஸ் லேபோரெடிஸ் நிறுவனத்தின் சார்பில், இன்று தமிழக முதல்வரிடம் 1 கோடி நிதி வழங்கப்பட்டது. எனவே விஷாகன் குடும்பம் திமுகவுடனும் அக்கட்சித் தலைவர்களுடனும் நெருங்கிய தொடர்புகொண்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.