Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தின் ரன்னிங் டைம் பற்றி வெளியான தகவல்!

ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தின் ரன்னிங் டைம் பற்றி வெளியான தகவல்!

vinoth

, வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (14:28 IST)
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்தின் ஷூட்டிங்க் முடிந்துள்ள நிலையில் இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸுக்கு இன்னும் 20 நாட்கள் உள்ள நிலையில் இன்று படத்தி இசை வெளியீட்டு விழா நடக்கிறது.

இந்நிலையில் படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படம் 2 மணிநேரம் 45 நிமிடம் ஓடுமளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் பாதி 1 மணிநேரம் 20 நிமிடமாகவும், இரண்டாம் பாதி 1 மணிநேரம் 25 நிமிடமாகவும் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமன்னாவின் லேட்டஸ்ட் வெக்கேஷன் க்ளிக்ஸ்!