தன்னுடைய 74 ஆவது வயதிலும் அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு இணையாக பிஸியாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த். கடந்த 2023 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
அதன் காரணமாக தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ரஜினிகாந்தின் நண்பருமான பாலகிருஷ்ணா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. எஸ் ஜே சூர்யா வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
தற்போது பாலக்காட்டில் இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் இந்த படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.