Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லால் சலாம் ஓடிடி ரிலீஸில் நடந்த திடீர் மாற்றம்… விலகிக் கொண்ட முன்னணி நிறுவனம்!

லால் சலாம் ஓடிடி ரிலீஸில் நடந்த திடீர் மாற்றம்… விலகிக் கொண்ட முன்னணி நிறுவனம்!

vinoth

, திங்கள், 1 ஏப்ரல் 2024 (14:14 IST)
ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த ‘லால் சலாம்’ திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான நிலையில் முதல் காட்சியில் இருந்தே எதிர்பார்த்த அளவு கூட்டம் வரவில்லை என சொல்லப்பட்டது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கியமான ரோல்களில் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். ஆனால் படம் ரிலீஸூக்குப் பிறகு படுதோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இந்த படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் மார்ச் 8 ஆம் தேதி ஸ்ட்ரீம் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த தேதியில் ஓடிடியில் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் இப்போது லால் சலாம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 12 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெட்ப்ளிக்ஸ் ஓடிடி வெளியீட்டில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயம் ரவியின் சைரன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!