Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் உணர்வை விட, மனித நேயம் மேலானது: 800 பட விவகாரம் குறித்து ராஜ்கிரண்!

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (10:03 IST)
நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 800 திரைப்படத்தில் நடிக்க முடிவு செய்ததை அடுத்து அவருக்கு கண்டனங்கள் குவிந்து வந்தது ஒரு கட்டத்தில் அவருடைய மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலகினர் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் பிரபல குணசித்திர நடிகர் ராஜ்கிரண் தனது பேஸ்புக்கில் இதுகுறித்து கூறியதாவது:
 
தம்பி விஜயசேதுபதி, ஒரு அற்புதமான மனிதர். இரக்க மனமும், ஈகை குணமும் கொண்டவர். தமிழ் உணர்வாளர், நல்ல பண்பாளர். அவரை நான் பார்த்ததோ, அவருடன் பேசியதோ இல்லையென்றாலும், அவரைப்பற்றி என் காதுக்கு வந்த நல்ல செய்திகள் ஏராளம்... அவருக்கு என்ன அழுத்தங்களோ, 800 படத்தில் நடிக்க சம்மதித்ததற்கு... இப்பொழுது அதிலிருந்து விலகிவிட்டார். இந்த ஒரு சம்பவத்தை வைத்து,
அவரின் மகள் மீது வன்மம் காட்டுவது, எந்த வகையிலும் ஏற்புடையதல்ல...
 
இது தமிழனின் பண்பும் அல்ல. தமிழ் உணர்வு என்று, வசனம் பேசினால் மட்டும் போதாது, தமிழ்ப்பண்போடு வாழ்ந்து காட்ட வேண்டும். தமிழ் உணர்வு என்பது அவசியம் தான். அதற்காக தரம் தாழ்ந்து, அவரையோ, அவர் குடும்பத்தினரையோ விமர்சிப்பதென்பது ஈனத்தனமானது... தமிழ் உணர்வை விட,  மனித நேயம் மேலானது. மறைந்த தேசிய தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையை முழுமையாக படித்தவர்களுக்கு இது புரியும்..
 
இவ்வாறு நடிகர் ராஜ்கிரண் தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’அமரன்’ படத்தை தூக்க மறுத்த தியேட்டர்கள்.. ‘கங்குவா’ ரிலீஸாகியும் குறையாத கூட்டம்..!

அமரன் படத்தின் நடிகர் தேர்வு தவறென்று முதலில் நினைத்தேன்… இயக்குனரைப் பாராட்டிய ஞானவேல் ராஜா!

சென்னையின் கூட்ட நெரிசலானப் பகுதிகளில் கூலி ஷூட்டிங்கை நடத்தும் லோகேஷ்!

பாலிவுட்டில் அவர எல்லோரும் ஒதுக்குனாங்க… கங்குவா வில்லன் குறித்து சூர்யா பகிர்ந்த சம்பவம்!

அடுத்தடுத்து பெரிய இயக்குனர்கள்… சிவகார்த்திகேயன் போடும் மாஸ்டர் ப்ளான்!

அடுத்த கட்டுரையில்