நடிகை ரம்யா பாண்டியன் சமீபத்தில் கண்ணில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ஆனால் இன்ஸ்டாகிராமில் தன் இடையழகைக் காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மூலமாக அதிக ரசிகர்களைக் கவர்ந்து இன்ஸ்டா பிரபலமானார். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும் சமூகவலைதளங்களின் மூலமாக அவர் ரசிகர்களோடு தொடர்பில் இருந்த வண்ணம் உள்ளார்.
இந்நிலையில் இப்போது ரம்யா பாண்டியன் கண்ணில் லேசர் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார் என செய்திகள் வெளியாகின. அதன் பின்னர் இப்போது அவர் சமூகவலைதளத்தில் குழந்தை ஒன்றை வைத்துக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.