Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் படத்தை தமிழ் ராக்கர்ஸில் ரிலீஸ் பண்ணுங்க; மிஷ்கின் அதிரடி

Webdunia
செவ்வாய், 23 ஜனவரி 2018 (13:45 IST)
என் படத்தை தியேட்டரில் தான் பாருங்க என்று சொல்ல மாட்டேன், தமிழ் ராக்கர்ஸும் ரிலீஸ் பண்ணுங்க என்று மிஷ்கின் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

 
மிஷ்கின் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் சவரக்கத்தி. இதில் இயக்குநர் ராம், பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆரல் கரோலி இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை ஆதித்யா இயக்கியுள்ளார்.
 
சவரக்கத்தி படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் மிஷ்கின் கூறியதாவது:-
 
இந்த திரைப்படத்தை எனக்கு ஒரு பைசா வராது. இந்த படத்தை எடுத்ததில் எனக்கு லாபம் தேவையே இல்லை. என் படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிய அந்த 4 பெரிய நடிகைக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் நடித்திருந்தால் என் படம் குட்டிச்சுவராகப் போயிருக்கும். 
 
இந்த படத்தின் வெற்றிக்கு 90% பூர்ணாவே காரணம் என்பேன். பூர்ணா சொந்த குரலில் தமிழில் டப்பிங் பேசியுள்ளார். என் படத்தை தியேட்டரில் தான் பாருங்க என்று சொல்ல மாட்டேன். தமிழ் ராக்கர்ஸும் ரிலீஸ் பண்ணுங்க. அவரவர் அவரவர் வேலையை பார்ப்போம் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாரா கலைக்கூடம் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ.ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் "ஆகக்கடவன"

24000 நடன அசைவுகள்.. கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி!

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments