Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாதவன் இயக்கி நடித்துள்ள ’ராக்கெட்ரி’ பட டிரைலர் ரிலீஸ்

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (17:43 IST)
மாதவன் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகும் ராக்கெட்ரி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கேரக்டரில் மாதவன் நடிக்கும் 'ராக்கெட்டரி' என்ற படம் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.
இந்த படத்தை நடிகர் மாதவனே இயக்கியும் வந்தார். இந்த படத்தின் பணிகள் எல்லாம் முடிந்து இப்போது ரிலிஸுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் மிகப்பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. மாதவன் இப்படத்தில் முதியவராகவும், இளம் வயதினராகவும் நடித்துள்ளார்.  மேலும் அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார் இப்படத்தின் நம்பி நாராயணன் கேரக்டரில் நடித்துள்ள மாதவனை பேட்டிகாண்பதுபோல் பத்திரிக்கையாளர் வேடத்தில் சூர்யா நடித்துள்ளார்.

இப்போது ராக்கெட்ரி படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. ஏப்ரல் 30 ஆம் தேதி அனைத்து மொழிகளிலும் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments