Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராக்கி படத்தின் தியேட்டர் கூட்டத்தை வீடியோ எடுத்த ரசிகர்… கூலாக பதில் சொன்ன இயக்குனர்!

ராக்கி படத்தின் தியேட்டர் கூட்டத்தை வீடியோ எடுத்த ரசிகர்… கூலாக பதில் சொன்ன இயக்குனர்!
, சனி, 25 டிசம்பர் 2021 (17:51 IST)
ராக்கி படம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் அதிக அளவில் ரசிகர்களை சென்று சேரவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

தரமணி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான வசந்த் ரவி தனது அடுத்த படமாக நடித்து முடித்துள்ள ராக்கி படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்தன. இந்த படத்தில் வசந்த்ரவியோடு பாரதிராஜா, ஜெயக்குமார், ரவினா ரவி மற்றும் அஷ்ரப் மல்லிசேரி எனும் மலையாள நடிகர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உருவான இந்த படம் வரும் டிசம்பர் 23 ஆம் தேதி வெளியானது.

இந்நிலையில் இந்த படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும் வெகுஜன ரசிகர்களை படம் பெரிதாக சென்று சேரவில்லை. இது சம்மந்தமாக தியேட்டரில் படம் பார்க்க சென்ற ரசிகர் ஒருவர் கூட்டமே இல்லாததை வீடியோவாக எடுத்து டிவிட்டரில் பகிர்ந்து அதில் படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரனையும் டேக் செய்திருந்தார். அதற்கு அவர் ‘பரவாயில்லை, பெரிய திரையில் உங்களுக்கான தனியான திரையிடல் என நினைத்துப் பாருங்கள்’ எனக் கூலாக பதில் சொல்லியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் – யுவன் சந்திப்பு… பின்னணியில் என்ன?