Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாங்கி குவித்த படங்களை ஓடிடியில் தள்ளிவிடும் விக்னேஷ் சிவன்!

வாங்கி குவித்த படங்களை ஓடிடியில் தள்ளிவிடும் விக்னேஷ் சிவன்!
, செவ்வாய், 1 ஜூன் 2021 (12:36 IST)
இயக்குனர் விக்னேஷ் சிவன் வாங்கி வெளியிட இருந்த ராக்கி திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தரமணி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான வசந்த் ரவி தனது அடுத்த படமாக நடித்து வந்த ராக்கி படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்தன. இந்த படத்தில் வசந்த்ரவியோடு பாரதிராஜா, ஜெயக்குமார், ரவினா ரவி மற்றும் அஷ்ரப் மல்லிசேரி எனும் மலையாள நடிகர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் விநியோக உரிமையை விக்னேஷ் சிவன் வாங்கி வெளியிட உள்ளார். இது மட்டுமில்லாமல் கூழாங்கல் உள்ளிட்ட 5 படங்களின் உரிமையை அவர் வாங்கி வைத்திருந்தார்.

ஆனால் கொரோனா காரணமாக இப்போது திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படங்களை வரிசையாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடப்பதகாக சொல்லப்படுகிறது. அதில் முதல்படமாக ராக்கி ஓடிடியில் ரிலீஸாக உள்ளதாம். எந்த ஓடிடி மற்றும் எப்போது போன்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யா படத்துக்கே அவ்ளோதான் கொடுத்தோம்… டாக்டர் ஓடிடி ரிலீஸுக்கு கேட்கப்படும் தொகை இவ்வளவா?