Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாலிவுட்டுக்கு டஃப் கொடுக்கும் ராஜமௌலி! – போர்ச்சுக்கல், துருக்கி மொழிகளிலும் ஆர்.ஆர்.ஆர்!?

Webdunia
புதன், 26 மே 2021 (17:26 IST)
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் உலக மொழிகள் பலவற்றிலும் வெளியாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் எண்டிஆர் நடித்துள்ள படம் ஆர்.ஆர்.ஆர். சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீதராம ராஜூ மற்றும் கோமரம் பீம் ஆகியோரது வாழ்க்கையை மையப்படுத்திய இந்த கதையை ஆக்‌ஷன் படமாக இயக்கியுள்ளார் ராஜமௌலி.

இந்த படம் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தாமதம், இரண்டாம் அலை கொரோனா உள்ளிட்ட காரணங்களால் 2022ம் ஆண்டு மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பட ரிலீஸுக்கு ஒரு வருட இடைவெளி உள்ள நிலையில் இந்த படத்தை உலக மொழிகளான ஆங்கிலம், போர்ச்சுகீஷ், ஸ்பானிஸ், துருக்கி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக தனுஷின் “ஜகமே தந்திரம்” படமும் உலக மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவித்த ‘குட் பேட் அக்லி’ படக்குழு.. என்ன ஆச்சு விடாமுயற்சி?

அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த தமிழ் நடிகர்.. வைரல் புகைப்படம்..!

'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க  டிஜிட்டல் பிரீமியர் ஸ்ட்ரீமாகவுள்ளது !

“சங்கீதம் இல்லாமல் வாழ்க்கை இல்லை” 'மாத்திக்கலாம் மாலை' ஆல்பம் வெளியீட்டு நிகழ்வில்- சுகாசினி பேச்சு!

விஜய் தவறான வழியில் செல்வது வருத்தமாக உள்ளது: இயக்குனர் மோகன் ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments