Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷாருக் படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்த சல்மான் கான்!

ஷாருக் படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்த சல்மான் கான்!
, வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (17:54 IST)
நடிகர் சல்மான் ஷாருக் கான் நடிக்கும் பதன் படத்தில் கௌரவ வேடத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் ஷாருக் கான் கடந்த சில வருடங்களாக தொடர் தோல்வி படங்களாக நடித்து வருகிறார். இதனால் சில வருடங்கள் ஓய்வு எடுத்துக் கொண்ட அவர் இப்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சல்மான் கான் கௌரவ வேடத்தில் நடிக்கிறார்.

10 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட சல்மான் கான் அதற்காக சம்பளம் கொடுக்க முயன்ற போது அதை வேண்டாம் என மறுத்து விட்டாராம். ஷாருக் மற்றும் சல்மான் கான் ஆகிய இருவரும் ஒரு காலத்தில் எலியும் பூனையுமாக இருந்து இப்போது நண்பர்களாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விவேக் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்