Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

Advertiesment
Samantha

Bala

, திங்கள், 1 டிசம்பர் 2025 (14:42 IST)
இன்று சமந்தாவும் இந்தி பட இயக்குனரான ராஜூவும் கோயம்புத்தூரில் ஈஷா பவுண்டேஷனில் நடைபெற்ற ஒரு விழாவில் திருமணம் செய்து கொண்டனர். அது சம்பந்தமான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாக்களில் வெளியாகி வருகிறது. அதை சமந்தாவே தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா.
 
குறிப்பாக பாணா காத்தாடி திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான சமந்தா தொடர்ந்து விஜய் சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டார். தமிழில் ஒரு பக்கம் தன்னுடைய அந்தஸ்தை தக்கவைத்து இருந்தாலும் தெலுங்கிலும் பல படங்களில் நடித்து தெலுங்கு மார்க்கெட்டையும் தனதாக்கி கொண்டார் சமந்தா.
webdunia
 
 தற்போது ஹிந்தியிலும் பல படங்களில் நடித்து வரும் சமந்தா சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். தான் நடித்த பேமிலி மேன் மற்றும் சிட்டடெல் போன்ற வெப் சீரிஸ்களை இயக்கிய ராஜூ  நிடிமொருவை  திருமணம் செய்து இருக்கிறார் சமந்தா. கடந்த 2014 ஆம் ஆண்டு நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா நான்கு வருடங்கள் நாக சைதன்யாவுடன் ஒன்றாக வாழ்ந்தார்.
 
அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நாக சைதன்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்றார். அதிலிருந்து தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வந்த சமந்தா இன்று ராஜூவை கரம் பிடித்திருக்கிறார். ராஜு நிடிமொருவும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்தான். சமந்தாவை வைத்து இரண்டு வெப் சீரிஸ்களை இயக்கியதன் மூலம் அதிலிருந்து இருவருக்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது.
webdunia
 
அது அப்படியே காதலாகி மாறி இருவரும் நெருங்கி பழக தொடங்கினார்கள். இன்று திருமணத்தில் இருவரும் இணைந்திருக்கிறார்கள். இவர்கள் திருமணம் மிக எளிமையாகவே நடந்திருக்கிறது. திரைப்பிரபலங்கள் பலரும் சமந்தாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  தனது திருமண புகைப்படங்களை வெளியிட்டு தனது சந்தோஷத்தையும் பகிர்ந்து உள்ளார் சமந்தா.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்