Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமந்தா நடிக்கும் சிட்டாடல் வெப் தொடர் ரீமேக்கா? அவரே அளித்த விளக்கம்!

Webdunia
திங்கள், 8 மே 2023 (14:12 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக இருப்பவர் குணசேகர். இவர் பல ஹிட் படங்களை இயக்கியுள்ள நிலையில் காளிதாசர் எழுதிய புராணத்தில் உள்ள ஷகுந்தலம் எனும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஒரு புராணத் திரைப்படத்தை சகுந்தலம் எனும் பெயரில் உருவாக்கினார். அந்த படத்தில் ஷகுந்தலை கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் தேவ் மோகன் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். படம் நீண்ட தாமதத்துக்குப் பிறகு ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மோசமான வசூலையே பெற்றுள்ளது. இதற்கு முன்னர் வெளியான சமந்தாவின் யசோதா திரைப்படமும் வெற்றியைப் பெறவில்லை.

இந்நிலையில் இப்போது அவர் பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இது ஏற்கனவே பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான சிட்டாடல் தொடரின் ரீமேக் என சொல்லப்பட்டது. ஆனால் அதனை சமந்தா மறுத்து  தான் நடிக்கும் தொடர் ரீமேக் இல்லை என்று தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments