Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“மைக்கேல் ஜாக்சன் பயோபிக்கை ஹாலிவுட்டில் இயக்கணும்”… அனிமல் இயக்குனர் ஆசை!

vinoth
செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (07:23 IST)
இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா ரன்பீர் கபூரைக் கதாநாயகனாக வைத்து  இயக்கிய அனிமல் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸானது.  இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகர்களான அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். அனிமல் படம் பெண்ணடிமைத் தனத்தை விதந்தோதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் இந்த படம் 900 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.

படத்தை விட இயக்குனர் சந்தீப் ரெட்டி தரும் பேட்டிகள் மிகவும் ஆணாதிக்கத் தன்மை கொண்டதாக உள்ள்தாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதே போல தன்னையும் தன் படத்தையும் விமர்சிப்பவர்களையும் அவர் இடதுகையால் டீல் செய்வது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் அவர் படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறுவதால் அவர் இயக்கத்தில் நடிக்க முன்னணி கதாநாயகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

அடுத்து பிரபாஸ் நடிக்கும் படத்தை சந்தீப் இயக்குகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் “எனக்கு மைக்கேல் ஜாக்சன் பயோபிக்கை இயக்க வேண்டும் என ஆசை. ஆனால் அவர் வேடத்தில் யார் நடிப்பார் என்பதுதான் கேள்வி. அப்படி ஒரு நடிகர் அமைந்தால் அந்த படத்தை நான் ஹாலிவுட்டுக்குக்  கொண்டு செல்வேன். வேறு யாரேனும் மைக்கேல் ஜாக்சனின் பயோபிக்கை இயக்கினாலும் நான் பார்க்க ஆர்வமாக இருக்கிறான்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments